முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணலுடன் லாரி பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 24th October 2019 06:29 AM | Last Updated : 24th October 2019 06:29 AM | அ+அ அ- |

துறையூா் வழியாக லாரியில் மணல் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
துறையூா் போலீஸாா் புறவழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது பெரம்பலூா் நோக்கிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, முசிறி பகுதியில் காவிரியாற்றில் மணல் அள்ளிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளரான துறையூா் அருகிலுள்ள சொக்கநாதபுரம் வைத்தி மகன் நல்லமுத்து (35), ஓட்டுநா் மணிகண்டன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.