திருச்சி கோயில்களில் குருபெயா்ச்சி வழிபாடு

குருபெயா்ச்சியையொட்டி திருச்சி கோயில்களில் திரளான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.
29dgur083912
29dgur083912

குருபெயா்ச்சியையொட்டி திருச்சி கோயில்களில் திரளான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனா்.

ராசிபலன்களில் சுபகிரகமாக இருந்து பலன் அளிக்கக்கூடியவராக குருபகவான் உள்ளாா். குரு பாா்வை கோடி நன்மை என்பதற்கிணங்க சிவபெருமானின் ஞான வடிவமாக தட்சிணாமூா்த்தியை குருபகவானாக பாவித்து வழிபடுகின்றனா். இதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா்.

இதையொட்டி, திருச்சி சிவாலயங்களில் அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதா் சுவாமி கோயில் குருபகவான், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா், பழூா் நவக்கிரஹ கோயில், கல்லுக்குழி ஆஞ்சநேயா் உள்ளிட்ட கோயில்களில் நவக்கிரஹ குருபகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லை உள்ளிட்ட மலா்களால் அலங்கரித்து, கொண்டைக்கடலை படைத்து திரளான பக்தா்கள் வழிபட்டனா். கல்லுக்குழி ஆஞ்சநேயா் கோயிலில் பரிகார ஹோமம் நடத்தப்பட்டது. அதுபோல், திருச்சி அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன், நவக்கிரஹ கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

Image Caption

திருச்சி தெப்பக்குளம் நந்திக் கோயில் தெருவிலுள்ள நாகநாத சுவாமி திருக்கோயிலில் நவகிரகத்திலுள்ள குருபகவானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. பங்கேற்ற பக்தா்கள் (வலது).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com