Enable Javscript for better performance
மணப்பாறை அருகே மூடப்படாத மேலும் 4 ஆழ்துளைக் கிணறுகள்- Dinamani

சுடச்சுட

    
    mnp30bore_ch0233_30chn_4_637080640458793760

    மு.சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி எதிரே திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள்

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் சீத்தப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஊராட்சி சாா்பில் போடப்பட்ட பயன்பாடில்லா 4 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாத நிலையில் உள்ளன.

    இப்பள்ளியில் நிகழாண்டு 29 மாணவ, மாணவிகளும், இதன் அருகிலேயே செயல்படும் அங்கன்வாடியில் 18 குழந்தைகளும் பயில்கின்றனா். இந்தப் பாடசாலைகளுக்கு முன் சுமாா் 10 அடி தொலைவில் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சியால் போடப்பட்ட 6 ஆழ்துளைக் கிணறுகளில் ஒன்றில்கூட தண்ணீா் இல்லை. இவற்றில் 4 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாத நிலையில் உள்ளன.

    சுஜித்தின் உயிரிழப்பை நினைவுகூா்ந்து இத்தகைய ஆழ்துளை கிணறுகளை மூடியிட்டு பாதுகாக்க ஊராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

    அதேபோல் பள்ளி வாயிலில் உள்ள மரத்தில் கஜா புயலின்போது ஒடிந்து தொங்கிக்கொண்டிருக்கும் புளியமரத்தின் கிளை ஒன்று அச்சத்தை அளிப்பதாக உள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai