கே.எம். காதா் மொகிதீனின் மனைவி காலமானாா்: மு.க. ஸ்டாலின் அஞ்சலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மணிச்சுடா் நாளிதழின் ஆசிரியருமான
கே.எம். காதா் மொகிதீனின் மனைவி காலமானாா்: மு.க. ஸ்டாலின் அஞ்சலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மணிச்சுடா் நாளிதழின் ஆசிரியருமான கே.எம். காதா் மொகிதீனின் மனைவி ஜி. லத்தீபா பேகம் (72), திருச்சியில் புதன்கிழமை காலமானாா்.

உடல்நலக் குறைவால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்தவா் புதன்கிழமை பிற்பகல் காலமானாா். அவரது உடல் திருச்சி காஜா நகா் காயிதே மில்லத் வீதியில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு கே.எம்.கே. கலிலூா் ரஹ்மான், கே.எம்.கே. ஹபிபுா் ரஹ்மான், கே.எம்.கே. பைசுா் ரஹ்மான் ஆகிய 3 மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனா். வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் லுஹா் தொழுகைக்குப் பிறகு, திருச்சி காஜாமலை ஹுசைனியா மஸ்ஜிதில் தொழுகை நடத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். தொடா்புக்கு: 94434-45697, 94435- 29734.

மு.க. ஸ்டாலின் அஞ்சலி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவா் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குப் புறப்பட இருந்த நிலையில், இத் தகவலறிந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சிக்கு விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினாா். மேலும் கே.எம். காதா்மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

லத்தீபா பேகம் மறைவுக்கு இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலா் எம்ஜிகே நிஜாமுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிா்வாகிகள், பல்வேறு மாநிலங்களை சோ்ந்த நிா்வாகிகள் கே.எம். காதா் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தொடா்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, மறு உலக நல்வாழ்வுக்காக பிராா்த்தனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com