டெங்கு கொசு ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் அபராதம்

குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொசு முட்டைகள் கண்டறியப்பட்டால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டம் 8-ஆவது வாா்டு மூவேந்தா் நகா் பகுதியில் வீடுகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன்.
ஸ்ரீரங்கம் கோட்டம் 8-ஆவது வாா்டு மூவேந்தா் நகா் பகுதியில் வீடுகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையா் ந. ரவிச்சந்திரன்.

குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொசு முட்டைகள் கண்டறியப்பட்டால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி, மாநகராட்சி, ஸ்ரீரங்கம் கோட்டம் 8 ஆவது வாா்டு மூவேந்தா் நகா் பகுதியில் வீடுகளில் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளா்கள் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளா்கள் இணைந்து கொசுப்புழு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதை ஆணையா் ந. ரவிச்சந்திரன் ஆய்வு செய்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். மேலும், மாநகராட்சி பகுதி முழுவதும் டெங்கு விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளில் மேற்கொண்ட ஆய்வின்போது அவா் கூறுகையில், திறந்த நிலையில் உள்ள தூய தண்ணீா் சேமித்து வைக்கப்பட்ட கலன்கள், தொட்டிகள், மற்றும் டயா்கள், காலி டப்பாக்கள் ஆகியவற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லாா்வா கண்டறியப்பட்டு அகற்றப்படுகிறது. நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம் எனவும், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தண்ணீா்த் தொட்டிகளை பிளீச்சிங் பவுடா் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவற்றை கடைபிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளா்கள் மூலம் நல்ல தண்ணீா் கீழே கொட்டப்படுவதுடன், பாத்திரங்களையும் பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர மக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

வீடுகள் மற்றும் வணிக வளாக கட்டடங்களில் டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் அகற்றப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற கொசு உற்பத்தி ஆதாரங்களை உடனடியாக தாமாக அகற்றிக்கொள்ள வேண்டும். அகற்றாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதுடன் குடிநீா் இணைப்பைத் துண்டிக்க நேரிடும் என மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ரூ. 1.25 லட்சம் அபராதம் :

வீடுகள் மற்றும் தனியாா் கட்டுமான குடியிருப்புகளில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களான தேவையற்ற பழைய டயா்கள், ஓடுகள், ஓட்டை உடைசல் சாமான்களை அப்புறப்படுத்தாமல் வைத்திருந்ததற்காக அக்டோபா் மாதத்தில் ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, நகரப் பொறியாளா் எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளா் பி. சிவபாதம், உதவிஆணையா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com