சுடச்சுட

    

    இருசக்கர வாகனத்தில்  வந்து மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு

    By DIN  |   Published on : 12th September 2019 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
    மணப்பாறை அடுத்த கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் மனவி பாத்திமா ராணி (59). இவர், புதன்கிழமை மஞ்சம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர். புகாரின்பேரில் மணப்பாறை போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai