சுடச்சுட

  

  தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
  இந்த கண்காட்சியில் கிரிக்கெட், சஞ்சீவி, பெருமாள் ஊர்வலம், நவ கண்ணிகள், பானை- கிருஷ்ணன், தசாவதாரம், அஷ்டலட்சுமி, கயிலாய மலை, கார்த்திகைப் பெண்கள், ஸ்ரீரங்கம், அன்னபூரணி, விநாயகர், மகாலட்சுமி வரம், மாயா பஜார் உள்ளிட்ட ஏராளமான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
  மேலும், மணிப்பூர், கொல்கத்தா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ரூ. 50 முதல் ரூ. 25,000 வரை விலையுள்ள பொம்மைகள் உள்ளன. இந்தக் கண்காட்சி அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறஉள்ளன. கண்காட்சியை புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தொடங்கி வைத்தார். பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் கங்காதேவி உடனிருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai