சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை மாலை பிரதோஷம் விழா நடைபெற்றது.
  முசிறி சந்திரமௌலீசுவரர், தா.பேட்டை காசி விஸ்வநாதர், வெள்ளூர் திருக்காமேசுவரர், தொட்டியம் அணலாடீசுவரர், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் ஆகிய கோயில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.  இதைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதணை நடத்தப்பட்டது. இவ்விழாவில், சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai