சுடச்சுட

  

  ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவு பேச்சுப் போட்டிகள்

  By DIN  |   Published on : 12th September 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்தியக் கலாசார நட்புறவுக் கழகம் இணைந்து நடத்திய, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு நினைவு, மாவட்ட  அளவிலான பேச்சுப் போட்டி திருச்சி கி.ஆ.பெ.வி. மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை   நடைபெற்றது. 
  இப்போட்டியில் சுமார் 30 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்வை கலை இலக்கியப் பெருமன்ற மாநகர் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் ஒருங்கிணைத்தார். போட்டியில் வென்றோர்களுக்கானப் பரிசு செப்டம்பர் 14 ஆம் தேதி, கலையரங்க கூட்ட அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.  
  நிகழ்வின் நிறைவில் மகாகவி பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு ஏஐடியூசி  மாவட்டத் தலைவர்  சுரேஷ் மாலை அணிவித்தார். 
  நிகழ்ச்சியில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமராஜ், மாணவர் பெருமன்ற மாநில துணை செயலாளர்  தினேஷ்,  இப்ராஹிம், மாவட்ட தரைக்கடை  சங்க தலைவர்  சிவா மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai