சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், முசிறியில் மாதர் சங்கத்தின்  கூட்டம், நிர்வாகிகள் தேர்வு புதன்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி, வீரமணிப்பட்டி, திண்ணணூர், அந்தரப்பட்டி பகுதி மக்களுக்கு நிலவும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க மாதர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்திற்கு, ஒன்றியத் தலைவர் சசிகலா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  தொடர்ந்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க முசிறி ஒன்றியத் தலைவர் டி.பி.நல்லுசாமி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்ட துணை செயலாளர் ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினர். 
  இதைத் தொடர்ந்து, மாதர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 
  இதில், ஒன்றியச் செயலாளராக கெஜப்பிரியா, ஒன்றிய துணை தலைவர்களாக விஜயலட்சுமி மற்றும் அலகம்மாள், ஒன்றியப் பொருளாளராக சரோஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக சுசிலா, ஜோதி, பொன்னம்மாள், ராஜேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai