சுடச்சுட

  

  மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில் பாரதியார் ஓவியங்களுடன் கூடிய அஞ்சல் அட்டை தொகுப்பு வெளியிடப்பட்டது.
  பள்ளி மாணவர், மாணவிகளையே தேசப்பற்றை வளர்க்கவும், மகாகவி பாரதியாரின் சிறப்புகளைப் பரப்பும் வகையில் "தூரிகையின் வண்ணத்துளிகள்' எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில், மாணவிகள் அபிராமி, தியா, மாளவிகா, பிரீத்தி ஆராதானா, ரமணா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா ஆகியோர் வரைந்த 8 ஓவியங்கள் அஞ்சல் அட்டையில் வெளியிடத் தேர்வு செய்யப்பட்டன.
  பாரதியின் சிறப்புகளை பறைசாற்றும் வகையில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் அஞ்சல் அட்டையின் பின்புறம் வெளியிட்டு அஞ்சல்துறை பெருமை சேர்த்துள்ளது.
  மத்திய மண்டல அஞ்சல்துறை, டிசைன் ஓவியப் பள்ளி ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. இந்த அஞ்சல் அட்டைகள் வெளியிடும் நிகழ்வு மத்திய மண்டல தலைமை அஞ்சலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், மாணவர்கள் வரைந்த ஓவியங்களுடன் கூடிய அஞ்சல் அட்டை தொகுப்பை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் வெளியிட, டிசைன் பள்ளி முதல்வர் நஸ்ரத் பேகம் பெற்றுக்கொண்டார்.
  மத்திய அஞ்சல் துறை இயக்குநர் தாமஸ் லூர்து ராஜ், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், முதுநிலை அதிகாரி மைக்கேல் ராஜ், ஆர்.எம்.எஸ் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ரவீந்திரன், டிசைன் பள்ளி தாளாளர் மதன், அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஸ், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி, யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், கலந்து கொண்ட பள்ளிக் குழந்தைகள் பலரும் மகாகவி பாரதியார் வேடமிட்டு வந்திருந்தது பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai