சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகேயுள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு  ஸ்ரீ பாலகாட்டு மாரியம்மன்  கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை 9 ஆம் தேதி   காலை 5 மணிக்கு  விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும்,  மாலை கொள்ளிடத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தக்குடம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை (செப்.10)  காலை 6.30  மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமமும்,  மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை (செப்.11) இரண்டாம்  மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், திரவிய ஹோமமும், வியாழக்கிழமை (செப். 12 ) அதிகாலை  நான்காம் கால யாக பூஜையும்,  கடம் புறப்பாடும், 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பாலகாட்டு மாரியம்மன்  திருகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் , பரிவாரசாமி கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai