நீர் நிலைகள் தூர் வாரும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஓமாந்தூர் கிராமத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருவதையும், துறையூர் வட்டம், சோபனாபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்  மற்றும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொப்பம்பட்டி ஏரியிலும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 
மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஏரி, குளங்களில் சேமிக்கும் வகையில்,  ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை அடைப்பு இல்லாமல் தூர்வார வேண்டும். அவற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனே அகற்றவும் வேண்டும் என உத்தரவிட்டார். உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியும்,  இ-பாதர்பேட்டை கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலும், வெங்கடசாலபுரம் கிராமத்தில் ரூ.96 ஆயிரம் மதிப்பிலும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், உப்பிலியபுரம் கிராமத்தில் ரூ. 2.75 கோடியில் நடைபெற்றுவரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணிகளையும் , வைரிச்செட்டிப்பாளையம், கொப்பம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்  பி.செல்வராஜ், அரியாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர்  ரீனா,  உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஆர்.பி.குணசேகரன், சந்திரசேகரன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com