Enable Javscript for better performance
குடிநீர் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 09:41 AM  |   அ+அ அ-   |    |  

    மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி கிராம மக்கள் சார்பில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த  கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் விநியோகம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் அளிப்பதில்லை என்றும், மக்கள் சிரமமடையும் போதெல்லாம் லாரிகள் மூலமாக மட்டுமே பற்றாக்குறையாக தண்ணீர் வழங்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் அலட்சியபோக்குடன் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வெள்ளிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரவிச்சந்திரன் தலைமையில் காலி குடங்களுடன் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    kattana sevai