மனைவி பிரிந்து சென்ற துக்கம்: கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 19th September 2019 09:33 AM | Last Updated : 19th September 2019 09:33 AM | அ+அ அ- |

துறையூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால்,கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
துறையூர் அருகிலுள்ள மதுராபுரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் து. ரவிச்சந்திரன்(48). சரியான வேலையில்லாததால், மாமியாரிடமிருந்து தனது மனைவி பூபதி(36)க்கு சேரவேண்டிய சொத்தை வாங்கி வரச் சொல்லி வற்புறுத்தி வந்தாராம்.
இதனால் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதால், பூபதி தனது மகன்கள் முகிலன், முகுந்தனை அழைத்துக் கொண்டு கடந்த இரு நாள்களுக்கு முன்பு பெரம்பலூரிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
ரவிச்சந்திரன் செல்லிடப்பேசியில் சமரசம் செய்தும் பூபதி துறையூர் வரவில்லை. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் செவ்வாய்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துறையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.