Enable Javscript for better performance
தீபாவளி: கோ-ஆப் டெக்ஸ் மையத்தில் 30% தள்ளுபடி: ரூ. 2.96 கோடி விற்பனை இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி: கோ-ஆப் டெக்ஸ் மையத்தில் 30% தள்ளுபடி: ரூ. 2.96 கோடி விற்பனை இலக்கு

    By DIN  |   Published on : 21st September 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி, கோ-ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை மையத்தில், நிகழாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 2.96 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு.
    இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் லாப நோக்கின்றி, நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர செயல்பட்டு வருகிறது. தனியாருடன் போட்டியிடும் வகையில் திருச்சி கோ ஆப் டெக்ஸ் நிறுவனம் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் இயங்கி  வருகிறது. புதிய ரக ஆடைகள் ரூ.3000 முதல் ரூ.55 ஆயிரம் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
    திருச்சி மத்திய பேருந்து நிலையம், மெயின்கார்ட்கேட், பாரத மிகுமின் நிலையம் (பெல்) ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவன மையங்களில்  விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கிரூபவ் துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டி, மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
    கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி  தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள 16 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 11.34 கோடிக்கும், திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில்  2.36 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு தஞ்சை மண்டலத்தில் ரூ. 13 கோடியும், திருச்சியில்  ரூ. 2.96 கோடிக்கும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
    இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் ஜே.ஜவஹர் ,மேலாளர் (வடிவமைப்பு, உற்பத்தி)  இரா.சீனிவாகன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) மு.அன்பழகன், விற்பனை நிலைய மேலாளர் கே.ஆனந்த் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai