குழந்தைகள் பாதுகாப்பு முகாம் தொடக்கம்

திருச்சி ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்திய ரயில்வே குழந்தைகள் அமைப்பு, சேவை தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நிலைய மேலாளர் விருத்தாச்சலம் கலந்துகொண்டு முகாமினை தொடக்கி வைத்தார். 
விழாவுக்கு, தமிழக ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமநாதன், ரயில்வே பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ரயில்வே குழந்தைகள் அமைப்பு சார்பில் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சேவை குழந்தைகள் உதவி மையத்துடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள், பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 
இதன் ஒரு பகுதியாக, திருச்சி ரயில் நிலைய நடைமேடை 1இல் பயணிகளுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கையேடு வெளியிடப்பட்டது. அதோடு, வழிதவறி ரயில்நிலையங்களில் காணும் குழந்தைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தல், 1098 மற்றும் 182 குழந்தைகள் உதவி எண்களுக்கு அழைத்தல், வழிகாட்டல் குறித்து சேவை அமைப்பினர் வீதி நாடகம் நடத்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com