Enable Javscript for better performance
துறையூர் அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    துறையூர் அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

    By DIN  |   Published on : 23rd September 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    துறையூர்: துறையூர் அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது காளிப்பட்டி கிராமம். இந்த கிராமம் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் இடது புறம் அம்மாப்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையும், வலதுபுறம் சிங்களாந்தபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையும் உள்ளது. 

    காளிப்பட்டியில் உள்ள துறையூர்- திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி அண்மையில் நடந்து முடிந்தது. பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் காளிப்பட்டியில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் வாகனங்கள் அந்த ஊரை வேகமாக கடந்து செல்கின்றன. 

    ஒரு சில விபத்துக்களும் நடந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தெற்கியூரிலிந்து காளிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சேவுகன் என்பவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் காயமடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த காளிப்பட்டி மக்கள் வேகத்தடையை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai