பொம்மை வீடு காவல் நிலையங்கள் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

திருச்சி சரக காவல்துறை சார்பாக நடைபெற்ற பொம்மை வீடு காவல்நிலைய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை


திருச்சி: திருச்சி சரக காவல்துறை சார்பாக நடைபெற்ற பொம்மை வீடு காவல்நிலைய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை துணைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கினார். 
"பொம்மை வீடு காவல் நிலையங்கள்' என்ற போட்டியானது, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, காவல்துறை தொடர்புடைய  பணிகளில் அவர்களுக்கு ஒரு ஈடுபாட்டினை வரவழைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று, பொம்மை வீடு காவல்நிலைய கட்டட மாதிரிகளை செய்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். அவை மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் பொதுமக்களின் பார்வைக்காகவும், வாக்களிப்புக்காகவும் வைக்கப்பட்டன. ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் வெற்றியாளர்கள், பொதுமக்கள் வாக்களிப்பின் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் காவல்துறை துணைத்தலைவர் தலைவர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஜூனியர் பிரிவில் ரூ.5,000, ரூ.4,000, ரூ. 3,000 ஆகியவை முறையே முதல் மூன்று பரிசுகளாகவும், சீனியர் பிரிவில் ரூ.5,000, ரூ.2,000 ஆகியவை முறையே முதல் இரண்டு பரிசுகளாகவும் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பரிசுகள் விபரம்: ஜூனியர் பிரிவு முதல் பரிசு -ஆர்.பரசுராம், அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்கலம் கிராமம், பெரம்பலூர் மாவட்டம். இரண்டாம் பரிசு - எம். ஹரிணி, எம்.ஹேமா, எம்.யஸ்வந்த்,  ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி. மூன்றாம் பரிசு - டி.மோனிகா, லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர். 
சீனியர் பிரிவு முதல் பரிசு - எப்.ஜியாவுதீன், எப்.அஜிஜூதீன், புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி. இரண்டாம் பரிசு - எம்.விகாஸ், எ.இப்ராம் அப்பாஸ், யு.அருண்குமார்,    மெளண்ட் சியோன் இன்ஜினியரிங் கல்லூரி புதுக்கோட்டை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com