Enable Javscript for better performance
சமயபுரம் கோயில்: செப்.29-இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சமயபுரம் கோயில்: செப்.29-இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 25th September 2019 12:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 29 தொடங்கி அக்டோபர் 8- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    இதுகுறித்து கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான கே.பி. அசோக்குமார் கூறியது:
    இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசை மறுதினம் பிரதமை திதி முதல் நவமி திதி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி, மகிசாசுரனை அழிக்க அம்மன் 9 நாள்கள் கடும் தவம் புரிந்து 10-ஆவது நாள் விஜயசதமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருவிழா செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. தினமும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கு இரவு 8 மணியளவில்  சிறப்பு தீபாராதனை நடைபெறும்,
    அக்டோபர் 7-ஆம் தேதி சரசுவதி பூஜையும்,  8-ஆம் தேதி விஜயதசமியன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்புபோடும் நிகழ்வு நடைபெறும். விழாவில் அம்மனை தரிசிக்கும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai