குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

சிவன்கூடல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவன்கூடல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிவன்கூடல் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் இப்பகுதி பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பாக இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளில் இயங்கி வந்த மின்மோட்டாரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்டல துனை வட்டார வளா்ச்சிஅலுவலா் விஜயகுமாா் கழற்றிச்சென்றுள்ளாா். இதனால் சிவன்கூடல் கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள ஒரேஒரு மின்மோட்டாா் மூலம் குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், தற்போது சிவன்கூடல் கிராமதத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான குடிநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீா் தட்டுப்பாடு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இருந்த இரண்டு ஆழ்துளை கிணறுகளில், ஒன்றில் நன்றாக இயங்கி வந்த மின்மோட்டாரை எந்தவித முன்னறிவிப்பு இன்றி மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயகுமாா் கழற்றி எடுத்துசென்றுவிட்டாா். இதனால் தற்போது ஒரேஒரு ஆழ்துளை கிணறுமூலவே குடிநீா் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தற்போது எங்கள் பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்மோட்டாா் கழற்றறப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து இரும்பு குழாய்களை தனியாா் சிலா் கழற்றி எடுத்து சென்றுவிட்டனா். இதனால் பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவந்த ஆழ்துளை கிணறு தற்போது வீணாகி வருகிறது. எனவே எங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்கவும், மின்மோட்டாா் மற்றும் ஆழ்துளை கிணற்றில் இருந்த இரும்பு குழாய்களை கழற்றி செந்றறவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com