சிறுகனூர், வேங்கைமண்டலம்,பகுதிகளில் நாளை மின்தடை

சிறுகனூர், வேங்கைமண்டலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர  மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,  வியாழக்கிழமை (செப்.26)  பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சிறுகனூர், வேங்கைமண்டலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர  மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,  வியாழக்கிழமை (செப்.26)  பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் ஸ்ரீரங்கம் கோட்டச் செயற்பொறியாளர் ஆர்.சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறுகனூர், வேங்கைமண்டலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
 இதனால்  சிறுகனூர் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் பெறும்  சிறுகனூர், சி.ஆர். பாளையம், எம்.ஆர். பாளையம், வாலையூர், சனமங்கலம், மணியங்குறிச்சி, ரெட்டிமாங்குடி, பி.கே. அகரம், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், ஜிகே பார்க், ஆவாரவள்ளி, சீதேவிமங்கலம், கூத்தனூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மின் விநியோகம் இராது.
வேங்கைமண்டலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மூவானூர், வேங்கைமண்டலம், தண்ணீர்பந்தல், மேல,கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாய்த்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் நகரம்  மற்றும் மேற்குப் பிரிவு அலுவலகப் பகுதிகளான மூவராயன்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இராது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com