Enable Javscript for better performance
மனிதனின் மன நிம்மதியே நிறைவான வாழ்வுக்கு அடித்தளம்- Dinamani

சுடச்சுட

    


    மனிதனின் மன நிம்மதியே நிறைவான வாழ்வுக்கு அடித்தளமாக அமையும் செல்வம் என்றார் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்.
    மணப்பாறை  ஆர்வி மஹாலில் சனிக்கிழமை தொடங்கிய தினமணி  ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சியில்,  வளம் பெருக நலம் பெறுக என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
    மணப்பாறை வெறும் முறுக்குக்கும், மாடுகளுக்கு மட்டும் சிறப்பு அல்ல. சங்க இலக்கியமான தொல்காப்பியத்திலேயே சிறப்பு வாய்ந்த ஊர் மணப்பாறை. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு சென்ற கோவலன், கண்ணகியும் கடந்து சென்ற ஊரும் மணப்பாறை தான். 
    மனிதனின் மன நிம்மதியே நிறைவான வாழ்வுக்கு அடித்தளமாக அமையும் செல்வமாகும். மனசு 1000 இடங்களில் அலைந்து திரிந்தாலும் மகிழ்ச்சி உள்ள நிகழ்வில் தான் ஆரோக்கியம் இருக்கும். காதில் கிடைக்கும் செய்திகள் ஜென்ம ஜென்மத்திற்கும் செல்வமாக நிறைந்திருக்கும்.
     மனிதனின் அனைத்து உடல் உறுப்புகளும் அதன் செயலில் அயர்ந்து போகும். ஆனால் காது எப்போதும் சோர்ந்துபோகாது. 
    செல்வம் என்பது சிந்தை நிறைவு தான். வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியில்லை, ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதில் வெற்றி கண்டிப்பாக இருக்கும் என்றார் ஞானசம்பந்தன்.
    தொடர்ந்து,   மூளை என்னும் மூலவர் என்ற தலைப்பில்  மூளை நரம்பியல் மருத்துவர் அ. வேணி பேசியது:  பக்கவாதத்தை வெல்லும் திறன் நம்மிடமே உள்ளது. நரம்பு மண்டலத்தை நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். எதையும் மகிழ்வுடன் அணுக கற்றுக்கொள்ள வேண்டும், அக மகிழ்ச்சியே ஆரோக்கியத்தை முழுமையாக அளிக்க முடியும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai