மணப்பாறையில் முதன்முதலாக தினமணி ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி தொடக்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தினமணி மற்றும் சிந்துஜா மருத்துவமனை ஆதர்ஷ் சிறப்பு மையம் இணைந்து நடத்தும் ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தினமணி மற்றும் சிந்துஜா மருத்துவமனை ஆதர்ஷ் சிறப்பு மையம் இணைந்து நடத்தும் ஆரோக்கியம் மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
மணப்பாறை ஆர்வி மஹாலில் இரண்டு நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியின் தொடக்க விழா சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டம் சார்-ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கண்காட்சியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். 
அதனைத் தொடர்ந்து, சிந்துஜா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பி. கலையரசன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன செயல் இயக்குநர் (இயக்கம்) எஸ்.வி.ஆர். கிருஷ்ணன், மணப்பாறை நகராட்சி ஆணையர் என். ஸ்ரீதேவி, காமராஜர்- மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் முத்து கார்த்திகேயன், சௌமா குழுமங்களின் தலைவர் ராஜரத்தினம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் பிரதிநிதியாக ஆர். கார்த்திகேயன், திருக்குறள் புலவர் நாவை. சிவம், பழந்தமிழ் காவிரி அறக்கட்டளைத் தலைவர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
அரங்குகள்: இக் கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவமனைகளின் அரங்குகள், இயற்கை மருத்துவமனை அரங்கு, உடற்பயிற்சி உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், உப்புநீரை குடிநீராக மாற்றும் இயந்திரம், வீட்டிலேயே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம், இயற்கை உணவுப் பொருள்கள், மணப்பாறை நகராட்சியின் சுகாதாரத் துறை செயல்பாடுகள், பேலியோ சிகிச்சை முறை, மருத்துவக் காப்பீடு, வலி நிவாரணி, மூலிகை மருந்து பொருள்கள் என பல்வேறு வகையான அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியின் உள்ளே நுழைந்து வெளியே சென்றால் அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள் முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கான பரிந்துரை, சலுகை விலை சிகிச்சை வசதி என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவக் காப்பீடு தொடர்பாகவும், காப்பீடு மூலம் பெறப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் விளக்கிக் கூறப்படுகிறது. இவைத்தவிர, மருத்துவம்,  உடல் ஆரோக்கியம்,  உணவுப் பொருள்கள் சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
சிந்துஜா மருத்துவமனை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்- யூனிட்-2 மணப்பாறை), மணப்பாறை ஏ.ஜெ. மருத்துவமனை, ஜி.கே.எம். சர்ஜிக்கல் மருத்துவமனை,  ஸ்ரீகுமரன் மருத்துவமனை, சுகம் மருத்துவமனை, புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை, தயாள் நர்ஸிங் ஹோம் புற்றுநோய் சிகிச்சை மையம், திருச்சி நியூரோ பவுண்டேஷன், சேது இஎன்டி  ரிசர்ச் சென்டர், துவரங்குறிச்சி நூர் மருத்துவமனை, ரோட்டரி சங்கங்கள், ஜோசப் கண் மருத்துவமனை, மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, மணப்பாறை நகராட்சி, குரு பெயின் கேர் கிளினிக், மணப்பாறை அரசு மருத்துவமனை, இதயம் ஸ்டோர்ஸ், ஜெயம் ஆர்தோடிக் சென்டர், அருண் ஹியரிங் சென்டர், ஹெச்ஐஎஸ் குரூப்ஸ், எக்கோ எனர்ஜி, எக்கோ பிரன்ட்லி, சுரபி இன்வஸ்மென்ட் சர்வீஸ், பாடி மசாஜர், ஸ்டேன்டர்டு ஹோம் நீட்ஸ், பவர் வேல்டு ஹோம் சோப் உள்ளிட்ட நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.  
 கண்காட்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்- யூனிட்-2 மணப்பாறை) சார்பில் பிஸ்கட், பேரிச்சை,  ஹார்லிக்ஸ், குளுகோஸ், தண்ணீர் பாட்டில், குளியல் சோப் உள்ளிட்டவை துணிப் பையில் வைத்து இலவசமாக வழங்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com