இந்து மகா சபா நிர்வாகியை கடத்திய 7 பேர் கைது

பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக, அகில பாரத இந்து மகா சபா நிர்வாகியை கடத்திய 7 பேரை காந்திமார்க்கெட் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 


பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக, அகில பாரத இந்து மகா சபா நிர்வாகியை கடத்திய 7 பேரை காந்திமார்க்கெட் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். 
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வைரபெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் இளையராஜா (32). இவர் அகில பாரத இந்து மகா சபா மாநிலச் செயலராக உள்ளார். திருச்சி வந்த இளையராஜா, வெள்ளிக்கிழமை இரவு காந்தி மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். 
அப்போது  அங்கு வந்த  மர்ம கும்பல் இளையராஜாவை தாக்கி, காரில் கடத்தி சென்றது. இதை கண்ட அப்பகுதி மக்கள் காந்தி மார்க்கெட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலறிந்த தனிப்படை போலீஸார்,  திருவானைக்கா கும்பகோணத்தான் சாலை அருகே  காரை மடக்கிப் பிடித்து இளையராஜாவை மீட்டனர்.  தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை காவல்நிலையத்துக்கு  அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில்,  அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், கே.புதூர் செந்தில்குமார்(30), துரைமங்கலம் தினேஷ்பாபு(36), நிவாஸ்(34),   திருமாந்துறை துரைராஜ்(23), திருச்சி கம்பரசம்பேட்டை பொன்னர்(26) மேலச்சிந்தாமணி ஆரீப்(20), நத்தஹர்வலி தர்கா அப்துல் சித்திக்(26)  என்பது தெரிய வந்தது. வேலை வாங்கி தருவதாகக் கூறி, செந்தில்குமாரிடம் ரூ.5.40 லட்சம் வாங்கி கொண்டு இளையராஜா ஏமாற்றி வந்ததால் அவரை கடத்தியது தெரிய வந்தது. 
இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீஸார் வழக்குப் பதிந்து, 7 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  
அடிப்படை உறுப்பினர் கூட இல்லை
அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் கல்கி ராஜசேகர், மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:
இளையராஜாவுக்கும், இந்து மகா சபாவுக்கும் எந்தவித  தொடர்பும் இல்லை.  அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.  இருந்த போதும் அகில பாரத இந்து சபா பெயரில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். 
இதுகுறித்து காவல்நிலையங்களில் புகார் அளித்தும் இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். எனவே அவரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com