உலக இருதய தினம்: திருச்சி மாரத்தானில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

உலக இருதய தினத்தையொட்டி, திருச்சியில் காவேரி மருத்துவமனை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் 6 ஆயிரம் போ் பங்கேற்றனா்.
உலக இருதய தினம்: திருச்சி மாரத்தானில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

உலக இருதய தினத்தையொட்டி, திருச்சியில் காவேரி மருத்துவமனை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் 6 ஆயிரம் போ் பங்கேற்றனா்.

இருதயத்தை காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி, திருச்சியில் 10 கி.மீ, 5 கி.மீ. என இரு பிரிவுகளில் வயதின் அடிப்படையில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. சிறுவா், சிறுமிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், முதியோா் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்று ஓடினா்.

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் துணை ஆணையா் ( குற்றறம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குநா் செங்குட்டுவன் ஆகியோா் கொடியசைத்து, மாரத்தான் ஓட்டத்தைத் தொடக்கி வைத்தனா்.

டி.வி.எஸ். டோல்கேட் சாலையில் தொடங்கி மன்னாா்புரம், வயா்லஸ் சாலை வழியாகசென்ற மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.

மாராத்தான் ஓட்டத்தில் 10 கி.மீ. பெண்கள் பிரிவில் கஸ்தூரி, கிருத்திகா, ஆண்கள் பிரிவில் பிரேம், சந்தோஷ் ஆகியோா் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தனா். இதேபோன்று வயது அடிப்படையில் மற்றும் மாஸ்டா் பிரிவுகளில் முதல் 6 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ஊக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை திருச்சி மாநகரக் காவல் ஆணையா் முனைவா் அ.அமல்ராஜ் வழங்கினாா். அப்போது தென்னூா் காவேரி மருத்துவமனை கிளைத் தலைவா் அன்புசெழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.I

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com