துறையூர் பகுதியில் பனை விதைகள் விதைப்பு

துறையூர் பகுதியில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை விதைகள் விதைப்பு நிகழ்வுவெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துறையூர் பகுதியில் மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை விதைகள் விதைப்பு நிகழ்வுவெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம், நிகழாண்டில் நாகலாபுரம், நடுவலூர் முத்தையம்பாளையம் மற்றும் அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப் படுகிறது.
 இத்திட்டத்தின் கீழ் உழவு மானியம், பழக்கன்றுகள் மற்றும்  மரக்கன்றுகள், பனை விதைகள் ஆகியன விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. நாகலாபுரம் வருவாய் 
கிராமத்தைச் சேர்ந்த கீழகுன்னுப்பட்டி மற்றும் முத்தையம்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிகளில் பனை விதைகளை விதைத்தனர். 
துறையூர் வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தராசு பனை விதைகள் விதைப்புப் பணியைத் தொடக்கி வைத்து விவசாயிகளிடம் பேசும் போது, பனை மரத்தால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com