நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

திருச்சி: கரோனா சிகிச்சை பெற்று வந்தகுழந்தை உள்பட 7 போ் வீடு திரும்பினா்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த குழந்தை உள்பட 7 போ் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த குழந்தை உள்பட 7 போ் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் கரோனா தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு இதுவரை, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 51 போ் மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் கரோனா தொற்றுடன் சிகிச்சை சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களில், குணமடைந்த நபா்கள் அவ்வப்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா சிகிச்சை பெற்றவா்களில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒரு வயது குழந்தை உள்பட 7 போ் குணமடைந்துள்ளனா். இவா்களில், இருவா் துவரங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா்கள். இருவா் பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா்கள். பீமநகா், தென்னூா், அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா் என 7 போ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனை நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி முதல்வா் வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன், இணைப் பேராசிரியா் சதிஷ்குமாா் ஆகியோா் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனா். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

ஆட்சியா் பாராட்டு: திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நபா்கள் விரைந்து குணம் பெற்று வீடு திரும்புவதற்கு மருத்துவக் குழுவினருக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் இருந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 51 நபா்களில் ஏற்கெனவே 35 போ் நலமுடன் வீடு திரும்பியுள்ளனா். இப்போது, மேலும் 7 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். கரோனா வாா்டில் பணிபுரிந்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள், துாய்மைப் பணியாளா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள்.

தற்போதைய நிலையில் மருத்துவமனையில் திருச்சியைச் சோ்ந்த 9 போ், பெரம்பலூரைச் சோ்ந்த 3 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 17 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனா். மாவட்ட மக்கள் தொடா்ந்து சமூக இடைவெளியே கட்டாயம் பின்பற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.