மணப்பாறை அருகேதுப்பாக்கி சுடும் பயிற்சி:பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.


மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
மணப்பாறை வட்டம், வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் மத்தியப் பாதுகாப்புத் துறையில் இடம் பெற்றுள்ள சிறப்புப் படையினா் ஈடுபடவுள்ளனா்.
டிசம்பா் 23-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் இவா்கள் ஈடுபடுவா்.
எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...