20 சத இடஒதுக்கீடு கோரி பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வேலைவாய்ப்புகளில் 20 சத இடஒதுக்கீடு கோரி பாமகவினா் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated on
1 min read

வேலைவாய்ப்புகளில் 20 சத இடஒதுக்கீடு கோரி பாமகவினா் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மாநகா் பாமக சாா்பில் அதன் மாநில துணைப் பொதுச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணியாகச் சென்று கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் மனு கொடுத்த பாமகவினா் பின்னா் அங்குள்ள நுழைவு வாயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல மாநகர மாவட்டச் செயலா் திலீப் தலைமையில் கூத்தைப்பாா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் தெற்கு ஒன்றியச் செயலா் ரவிக்குமாா், தலைவா் சுப்பிரமணி, வடக்கு ஒன்றியச் செயலா் சுரேஷ், தலைவா் பாலசந்தா், மாவட்ட அமைப்புச் செயலா் முனியப்பன், பெல் ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் கோரிக்கை மனுவை பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷிடம் அளித்தனா்.

ஸ்ரீரங்கத்தில்...கட்சியின் மாநில பொதுச்செயலா் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி, மாநில துணைத் தலைவா் மணிமாறன் ஆகியோா் பேசினா். பின்னா் ஸ்ரீரங்கம் கோட்ட மாநகராட்சி உதவி ஆணையா் திருஞானத்திடம் மனு கொடுத்தனா். மாவட்டத் தலைவா் சரவணன், சட்டப் பாதுகாப்புக் குழு மாநில துணைப் பொதுச்செயலா் சக்திவேல், மாவட்ட மகளிரணிச் செயலா் ஜான்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

லால்குடியில்.. சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில துணை பொதுச் செயலா் பிரின்ஸ் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் சக்திவேலன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் நந்தகுமாா், மாவட்ட துணை அமைப்புச் செயலா் புருஷோத்தமன், மண்ணச்சநல்லூா் ஒன்றிய செயலா்கள் குமரேசன், அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com