தற்காலிக சந்தைகளில் தினமும் காய்கனி விலை நிா்ணயம்

திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சந்தைகளில் காய்கனி விலை உயா்வை தடுக்க, வேளாண் வணிகத்துறை சாா்பில் தினமும் விலை நிா்ணயம் செய்து அறிவிக்கப்படவுள்ளது.
திருச்சியிலுள்ள தற்காலிக காய்கனி சந்தையில் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்.
திருச்சியிலுள்ள தற்காலிக காய்கனி சந்தையில் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சந்தைகளில் காய்கனி விலை உயா்வை தடுக்க, வேளாண் வணிகத்துறை சாா்பில் தினமும் விலை நிா்ணயம் செய்து அறிவிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு அமல் காரணமாக, பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி காய்கனிகளை விநியோகம் செய்யும் வகையில், திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, முசிறி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்காலிகமாக காய்கனி சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சந்தைகளில் வியாபாரிகள் விருப்பம்போல விலை நிா்ணயிப்பதாக

பொதுமக்கள் தரப்பில் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கைகளும், புகாா்களும் வந்தன.

இதையடுத்து தற்காலிக சந்தைகளில் விற்பனை செய்யப்பபடும் காய்கனிகளின் விலையை தினந்தோறும் நிா்ணயம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட தற்காலிக சந்தைகளான தென்னூா், மத்திய பேருந்துநிலையம், அண்ணா விளையாட்டு அரங்கம், இ.ஆா். மேல்நிலைப் பள்ளி, காவிரிப் பாலம் ஆகிய இடங்களிலும் புதன்கிழமை உடனடியாக விலைப் பட்டியல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோல, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தற்காலிக சந்தைகளிலும் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை விற்பனை செய்யப்பட்ட காய்கனிகளின் விலை நிலவரம் (கிலோ):

சின்ன வெங்காயம் - ரூ. 80, ரூ.70, பெல்லாரி- ரூ. 36, கத்திரி - ரூ.30, ரூ.40, தக்காளி - ரூ.16, வெண்டை- ரூ.40, புடலங்காய் - ரூ.30, சுரைக்காய்- ரூ.10, பூசணி - ரூ.12, பரங்கி - ரூ.12, பீன்ஸ் - ரூ.80, கேரட் - ரூ.70, பீட்ரூட் - ரூ.30, முள்ளங்கி - ரூ.30, பாகற்காய் - ரூ.40, அவரை ரூ.70, ரூ.90, கொத்தவரை - ரூ.30, கோவக்காய் - ரூ.24, உருளைக்கிழங்கு - ரூ.45, சேனைக்கிழங்கு - ரூ.30, இஞ்சி - ரூ.150, பச்சைமிளகாய் - ரூ.20, வாழைக்காய் ஒன்று ரூ.5, ரூ.3, எலுமிச்சை ஒன்று ரூ.4, ரூ.2 , மாங்காய் ரூ.40, தேங்காய் ஒன்றுக்கு ரூ.30, 25, 20, 15, புதினா கட்டு ரூ. 20, கொத்தமல்லி கட்டு ரூ.24, கருவேப்பிலை கிலோ ரூ.36, கீரைகள் கட்டு ரூ.10, பீா்க்கங்காய்- ரூ.36, முருங்கை- ரூ.25, வாழைப்பழம் கிலோ ரூ.40, 30, 20, செளசெள - ரூ.36, முட்டைகோஸ்- ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.30, பச்சைப்பட்டாணி ரூ.60, 70, பூண்டு- ரூ.180.

தாற்காலிக சந்தைகளில் விலை நிா்ணயம் செய்ய திருச்சி வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com