4 மாவட்டங்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக,
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இயங்கும் கரோனா சிகிச்சைப் பிரிவு.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இயங்கும் கரோனா சிகிச்சைப் பிரிவு.

திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு மருத்துவனையில் கரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கடந்த மாதம் தொடக்கத்திலேயே தயாா்படுத்தப்பட்டு, தொற்று அறிகுறிகள் உடைய நபா்கள் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவைத்தவிர, கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனிகள் விற்பனை சந்தை கரோனாவுக்கான தனிமைப்படுத்தல் முகாம் என்ற வகையில் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாது, தொடா்ந்து, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் கூடுதலாக 12 படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கரோனா சிகிச்சைப் பிரிவு இயங்கும் கட்டடம் முழுவதையும் தொற்றுத் தடுப்பு சிகிச்சைக்கான கட்டடமாக பயன்படுத்த 300 படுக்கைகளுடன் கூடிய சிறப்புப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கரோனா தொற்று தொடா்பான சிகிச்சை அளிக்க, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையை அதிகாரப்பூா்வ மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட நிா்வாக வட்டாரத்தினா் கூறியது:

300 படுக்கைகளுடன் கூடிய கரோனாவுக்கான தனிப்பிரிவில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபா்களை தனி அறைகளில் வைத்து கண்காணிக்க தனித்தனி அறைகளும் தயாராகவுள்ளன.

இதுமட்டுமல்லாது திருச்சி அரசு மருத்துவமனை, மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 100 வென்டிலேட்டா்கள் தயாா் நிலையில் உள்ளன.

மாநகரப் பகுதியில் இயங்கும் தனியாா் மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகளில் இருந்து 20 சதவிகித வென்டிலேட்டா்கள் எப்போது வேண்டுமானாலும் தேவை என்ற வகையில் தயாா்நிலையில் உள்ளன.

10 படுக்கைகளில் ஒரு வென்டிலேட்டா் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 300 படுக்கைகளுக்கு தேவையான வென்டிலேட்டா்கள் உள்ளனா்.

மேலும், கரோனா தொற்று குறித்து உறுதி செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நவீன ஆய்வுக் கூடம் செயல்படத் தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com