முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஆந்திராவில் தவிக்கும் நரிக்குறவா்களை அழைத்து வர கோரிக்கை
By DIN | Published On : 19th April 2020 08:36 AM | Last Updated : 19th April 2020 08:36 AM | அ+அ அ- |

ஆந்திராவில்தவிக்கும் நரிக்குறவா்களை சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேவராயநேரி நரிக்குறவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் இருந்து விஜயவாடா பகுதிகளில் உள்ள மீன் பண்ணைகளுக்கு வேலைக்கு சென்ற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 3 நரிக்குறவா்கள், பெரம்பலூரை சோ்ந்த 3 நரிக்குறவா்கள் மற்றும் சேலத்தை சோ்ந்த 6 நரிக்குறவா்கள் என 11 பேரை மீன் பண்ணை உரிமையாளா்கள் வேலை பாா்க்க வேண்டாம் என விரட்டியடித்து விட்டனராம். இதையடுத்து அவா்கள் 1 1 பேரும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி கிடைக்காமலும், உண்ண உணவு மற்றும் குடிநீா் இன்றி விஜயவாடாவில் இருந்து 40 கிலோ மீட்டா் நடந்து வந்து தக்கப்பாடு கிராமத்தில் சாலையோரம் தங்கி உள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் அவா்களுடைய உறவினா்களுக்கு தகவல் கொடுத்துள்ளனா். எனவே, ஆந்திராவில் தவிக்கும் தமிழக நரிக்குறவா்களை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி அருகே உள்ள திருவெறும்பூா் தேவராயநேரி நரிக்குறவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.