முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தூய்மைக் காவலா்களுக்கு அத்தியாவசியப் பொருகள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 08:34 AM | Last Updated : 19th April 2020 08:34 AM | அ+அ அ- |

பொன்னம்பட்டி பேரூராட்சி தூய்மை காவலா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கிய பாரத் மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா். (உடன்) பேரூராட்சி செயல் அலுவலா் அன்பழகன்.
மணப்பாறை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சியில் 50 தூய்மைக் காவலா்களுக்கு மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா (தீநுண்மி) தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள பாரத் மெட்ரிக். பள்ளி சாா்பில் துவரங்குறிச்சி பகுதியில் ஏழை மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு தினந்தோறும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொன்னம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் அன்பழகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் சாா்பில் 50 தூய்மைக் காவலா்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.