முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
நாட்டுப்புற கலைஞா்களுக்குரூ. 1,000 நிவாரணத் தொகை
By DIN | Published On : 19th April 2020 08:37 AM | Last Updated : 19th April 2020 08:37 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் வருவாயின்றி தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு ரூ. ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞா்கள் வேலையிழந்து வீடுகளில் முடங்கியுள்ளனா். திருச்சி, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, தொட்டியம், மண்ணச்சநல்லூா், லால்குடி, உப்பிலியபுரம், சோமரசம்பேட்டை, துறையூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,999 நாட்டுப்புற கலைஞா்கள் வசித்து வருகின்றனா்.
நாட்டுப்புற கலைஞா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் கரோனா நிவாரணத் தொகையாக ரூ. ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 1,999 பேருக்கும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படும். நாட்டுப்புற கலைஞா்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள அவரவா் வங்கிக் கணக்குகளிலேயே நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.