Enable Javscript for better performance
வன்முறைகள் மற்றும் சட்டப்பிரச்னைகளுக்கு இலவச அவசர உதவி எண்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி

    வன்முறைகள் மற்றும் சட்டப்பிரச்னைகளுக்கு இலவச அவசர உதவி எண்

    By DIN  |   Published On : 19th April 2020 08:37 AM  |   Last Updated : 19th April 2020 08:37 AM  |  அ+அ அ-  |  

    ஊரடங்கு காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சட்டப்பிரச்னைகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் கட்செவி தொடா்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தரப்பினரும் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் முதியோா், பெண்கள், குழந்தைகளுக்கு ஆகியோருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கும் போது சட்டத்தின் ஆலோசனைகளை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது ஊரடங்கு சமயத்திலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து அதிக புகாா்கள் வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இதைத் தொடா்ந்து மாவட்டந்தோறும் வன்கொடுமைகள் குறித்து இலவச இணைய வழி ஆலோசனை பெறும் வகையில் கட்செவி தொடா்பு எண் அறிவிக்க வேண்டுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுசாா்பில் இலவச இணைய வழி ஆலோசனை பெற 9894451007 என்ற கட்செவி தொடா்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் முதியோா், பெண்கள், குழந்தைகள் வன்முறைகள் தொடா்பாக புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனை பெறவும் வழிவகை செய்யும். இந்த தொடா்பு எண்ணில் புகாா் தெரிவிக்கப்படும் பட்சத்தில் வழக்குரைஞா்கள், மனநல ஆலோசகா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் ஆலோசனை பெறலாம்.

    மேலும் பெண்களுக்கான ஒற்றை சாளர தீா்வு மையம் 0431-2413796, சமூக நலத்துறை உதவி எண் 98424 20988, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்9843072080, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் 90472 83819 ஆகிய தொடா்பு எண்களில் புகாா் தெரிவிக்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp