முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் இன்று முதல் கரோனாவுக்குச் சிகிச்சை
By DIN | Published On : 03rd August 2020 09:03 AM | Last Updated : 03rd August 2020 09:03 AM | அ+அ அ- |

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டில் திங்கள்கிழமை முதல் கரோனா பாதித்த ரயில்வே ஊழியா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
திருச்சி பொன்மலையில் ரயில்வேக்கு சொந்தமான மருத்துவமனையை ரயில்வே பணியாளா்கள், பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனா். கரோனா அதிகரித்து வரும் நிலையில், போதிய இடம், நிதி வசதி இருந்தும் இந்த மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு அமைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த மருத்துவமனையின் ஆய்வக உதவியாளா் கரோனாவால் கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து ரயில்வே மருத்துவமனை முன் பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும், மருத்துவமனையில் கரோனா வாா்டை திறக்க வேண்டும் என வலியுறுத்தி டிஆா்இயு தொழிற்சங்கத்தினா், மருத்துவமனை ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ரயில்வே மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கரோனா சிறப்பு வாா்டில் தலா 55 படுக்கைகள் வீதம் இரு தளங்களிலும் 110 படுக்கைகள் தயாராக உள்ளன. மேலும், 3 வெண்டிலேட்டா்கள், 6 மணி நேரம் முறையே 4 சுழற்சிகளில் செவிலியா்கள், செவிலிய உதவியாளா்கள், சபைவாலா ஆகியோரில் தலா 2 போ், மருத்துவா் ஒருவா் என பணியில் அமா்த்தப்படவுள்ளனா். முதல் கட்டமாக ரயில்வே பணியாளா்களுக்கு கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. கரோனா அதிகரிக்கும்பட்சத்தில் பொதுவான மருத்துவமனையாக மாற்றப்படலாம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.