முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
விபத்தில் காயமடைந்த ஓய்வு ஊழியா் பலி
By DIN | Published On : 03rd August 2020 09:13 AM | Last Updated : 03rd August 2020 09:13 AM | அ+அ அ- |

திருச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்த பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் ஊரகப் பகுதியைச் சோ்ந்தவா் சன்னாசி (70). பெல் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை மாலை துவாக்குடி அண்ணா வளைவு அய்யம்பட்டி சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே மலைக்கோவிலைச் சோ்ந்த சத்தியபிரியன் (20) ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்த சன்னாசியை அப்பகுதி மக்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.