பொன்மலை ரயில்வே பணிமனை முன் முற்றுகை போராட்டம்

தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், பொதுமுடக்கத்தில் பொன்மலைக்கு வட மாநிலத்தவர்கள் வருகை தந்தது குறித்து நடவடிக்கை கோரியும் பல்வேறு அமைப்புகள் இணைந்து
பொன்மலை ரயில்வே பணிமனை
பொன்மலை ரயில்வே பணிமனை

தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், பொதுமுடக்கத்தில் பொன்மலைக்கு வட மாநிலத்தவர்கள் வருகை தந்தது குறித்து நடவடிக்கை கோரியும் பல்வேறு அமைப்புகள் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் கடந்த 4ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக வட மாநிலத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் விதிமுறைளை மீறி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்த நபர்கள் இ-பாஸ் பெறாமல் வந்ததாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பொன்மலை ரயில்வே பணிமனை முன் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமைக் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், மக்கள் அதிகாரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழில்நுடப்பப்பிரிவில் வேலைக்கு எடுக்கப்பட்ட நபர்களில் தமிழர்களுக்கு சொற்ப அளவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பணிமனைகளில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். 

ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு இடம் வழங்க வேண்டும். தமிழக அரசின் வேலைவாய்ப்பில் பிற மாநிலங்களில் இருந்து பணிக்கு வரலாம் என்ற அசாரணையை ரத்து செய்ய வேண்டும். பொதுமுடக்க காலத்தில் இ-பாஸ் இல்லாமல் பொன்மலைக்கு வந்த வட மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. 

இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடிகளுடனும், கோரிக்கை பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com