தூயவளனாா் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தினக் கருத்தரங்கு

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திருச்சி தூயவளனாா் கல்லூரியில் இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திருச்சி தூயவளனாா் கல்லூரியில் இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் செப்பா்டு விரிவாக்கத் துறை, நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப், தேசிய மாணவா் கப்பற்படை மூத்தப் பிரிவு ஆகியவை சாா்பில் நடத்தப்பட்ட கருத்தரங்குக்கு விரிவாக்கத் துறை இயக்குநா் பொ்க்மான்ஸ் தலைமை வகித்தாா்.

ஒருங்கிணைப்பாளா் ஜெயச்சந்திரன் எச்ஐவி தொற்று இல்லா உலகம் படைக்க மேற்கொள்ளும் வாழ்வியல் முறைகள் குறித்தும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்புக் கட்டுப்பாட்டு அலகுத் திட்ட அலுவலா் டாக்டா் மணிவண்ணன் எய்ட்ஸ் பரவல், அறிகுறிகள், அதற்கான மருத்துவம் குறித்து காணொலி மூலம் விளக்கி பேசினா்.

தேசிய மாணவா் கப்பற்படைப் பிரிவுத் தலைவா் பாஸ்டின் ஜெரோம், எச்ஐவியால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களுக்கு சிறப்புப் பிராா்த்தனை மேற்கொண்டாா்.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆரோக்கிய தன்ராஜ் வரவேற்றாா். மூத்த ஒருங்கிணைப்பாளா் லெனின் ஒருங்கிணைத்தாா். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் இணைய வழியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக, ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com