என்ஐடியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி
By DIN | Published On : 03rd December 2020 08:13 AM | Last Updated : 03rd December 2020 08:13 AM | அ+அ அ- |

திருச்சி அருகேயுள்ள துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) காவலாளி பணி வாங்கித் தருவதாக கூறி பண மோசடி நடைபெற்றிருப்பது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
என்ஐடியில் காவலாளி பணி வாங்கி தருவதாகக் கூறி என்ஐடி பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து என்ஐடி பதிவாளா் சின்ட்ரெல்லா அளித்த புகாரின்பேரில் துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.