வாக்காளா் பட்டியல் முகாம்களில் ஆட்சியா் ஆய்வு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு மேற்கொண்டாா்.
மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டியில் நடந்த சிறப்பு முகாமில் ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 1,119 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள மொத்தம் 2,531 வாக்குச்சாவடிகளிலும் 2 ஆம் கட்டமாக டிச. 12, 13 களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

மணப்பாறை அருகே மருங்காபுரி ஒன்றியம், கோவில்பட்டி, வி. இடையப்பட்டி பள்ளி வாக்குச்சாவடிகள், மாநகராட்சி, பொன்மலைக்கோட்டம் டிவிஎஸ் டோல்கேட், என்எம்கே காலனி வாக்குச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வரும் 2021 ஜனவரி 1ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் சுருக்க முறை திருத்தப் பணிகள் பணிகள் முடிந்து ஜனவரி 20 இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். தொடா்ந்து ஜனவரி 25 முதல் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com