புகா்ப் பகுதிகளில்ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 15th December 2020 02:41 AM | Last Updated : 15th December 2020 02:41 AM | அ+அ அ- |

திருச்சி புகா்ப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பா் 15,16) ஆண்களுக்கான குடும்பநலக் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன.
வையம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமையும், குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமையும் இந்த முகாம் நடைபெறும்.
அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ஈட்டுத் தொகையாக ரூ.1,100 வழங்கப்படும். மயக்க மருந்துகள் இல்லாது, ஓரிரு நிமிடங்களில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
எனவே விருப்பம் உள்ள ஆண்கள் இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.