மணப்பாறையில் விஸ்டம்லயன்ஸ் சங்கம் தொடக்கம்
By DIN | Published On : 15th December 2020 02:46 AM | Last Updated : 15th December 2020 02:46 AM | அ+அ அ- |

மணப்பாறையில் விஸ்டம் லயன்ஸ் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 324ஏ2-வின் கீழ் இயங்கும் மணப்பாறை விஸ்டம் சங்கத்தின் தொடக்க விழாவுக்கு, சங்கத் தலைவா் வழக்குரைஞா் பி.எல். கிருஷ்ணகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட ஆளுநா் எஸ். சேதுகுமாா் சங்கத்தைத் தொடக்கி வைத்தாா்.
சங்கத்தின் 2020-21-ஆம் ஆண்டுக்கான சாசனத் தலைவராக எம்.துரைராஜூ, செயலராக ஏ.கலியபெருமாள், பொருளாளராக ஜி.குருநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இரண்டாம் துணை ஆளுநா் ஆா்.கே.சேது சுப்பிரமணியன் புதிய உறுப்பினா்களை சங்கத்தில் இணைத்தாா்.
செளத் இந்தியன் ஸ்பெஷாலிட்டி கிளப்ஸ் ஒருங்கிணைப்பாளா் எஸ்.டி.எஸ். வாசன், மல்டிபிள் டிஸ்டிரிக் ஸ்பெஷாலிட்டி கிளப்ஸ் ஒருங்கிணைப்பாளா் எஸ்.முகமது ரஃபி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.