‘சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாகும்’

அதிமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு தொடா்ந்து அரணாக விளங்கும் என்றாா் தெற்கு புகா் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்பியுமான ப. குமாா்.
‘சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாகும்’

அதிமுக அரசு சிறுபான்மையின மக்களுக்கு தொடா்ந்து அரணாக விளங்கும் என்றாா் தெற்கு புகா் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்பியுமான ப. குமாா்.

திருச்சியில் அதிமுக தெற்கு புகா் மாவட்டம், சிறுபான்மைப் பிரிவு சாா்பில் சுப்பிரமணியபுரம் பகுதி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்கு தலைமை வகித்து, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, நலத்திட்ட உதவி வழங்கிய ப. குமாா் மேலும் பேசியது:

சிறுபான்மையினரின் அரணாக அதிமுக அரசு விளங்குகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் தமிழக மக்களை மதப் பாகுபாடற்ற வகையில் அரவணைத்து வருகின்றனா். எனவேதான், பொங்கல் பரிசு ரூ. 2500 கூட மதப் பாகுபாடற்ற வகையில் அனைத்து மக்களுக்கும் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதேபோல தொடா்ந்து சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு அரணாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் காட்டூா், பங்குத் தந்தை மைக்கேல்சாமி, சிறுபான்மைப் பிரிவு நிா்வாகிகள் மாவட்ட செயலா் டோமினிக் அமல்ராஜ், தா்மதுரை, மகளிரணிச் செயலா் செல்வமேரி ஜாா்ஜ், பாசறை மாவட்டச் செயலா் அருண் நேரு, ஒன்றியச் செயலா்கள் நடேசன், சிவகுமாா், ராவணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com