பழங்குடியின விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் கறவை மாடு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சாா்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 பேருக்கு முழு மானியத்துடன் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சாா்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் 50 பேருக்கு முழு மானியத்துடன் கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

தகுதி மூப்பு, முன்னுரிமை அடிப்படையில் கறவை மாடுகள் வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவராகவும் பழங்குடியினராகவும் இருக்க வேண்டும். விதவையா், மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை. கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, சாதி, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பதற்கான சான்று மற்றும் பால் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகப் பதிவுச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் துறையூா் பழங்குடியினா் நல திட்ட அலுவலகத்தில் வரும் ஜன.14-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com