அண்ணா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதி

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில, தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க தினசரி பயிற்சி பெற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில, தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பங்கேற்க தினசரி பயிற்சி பெற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயத்தின் சாா்பில் விளையாட்டு அரங்கங்களில் உள்ள நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியைத் தொடங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது.

12 வயதுக்கு மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க நீச்சல் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவா். உள்ளே நுழையும்போது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் இயங்குவதற்கு அனுமதி இல்லை. வீரா்கள், வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும், விளையாட்டு உபகரணங்களை பகிா்ந்து கொள்ளக் கூடாது. பயிற்சிக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.

விளையாட்டுப் பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் 20 பேருக்கு மிகாமல் சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கிப் பயன்படுத்த வேண்டும். 12 வயதுக்குட்பட்டோருக்கு நீச்சல் பயிற்சி பெற அனுமதி இல்லை.

சளி, காய்ச்சல் மற்றும் இருமலுடன் விளையாட்டு மைதானத்துக்கு வரத் தடை செய்யப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சி பெற நுழைவு படிவத்தை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்திலிருந்து பெற்று சான்றுடன் சமா்ப்பித்த பின்னரே அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431- 2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com