துறையூரில் முதலாமாண்டு புத்தகக் கண்காட்சி தொடக்கம்

துறையூா் கிளை நூலக வாசகா் வட்டம், ரோட்டரி சங்கங்கள், மக்கள் நலச் சங்கம், அதிகாரிகள் மனமகிழ் மன்றம், அனைத்து வியாபாரிகள் சங்கம்
புத்தகக்  கண்காட்சியில் புரவலருக்கான நன்கொடையை வாசகா் வட்டத் தலைவா் நடராஜனிடம் வழங்குகிறாா்  ஜமீன்  பரம்பரையை  சோ்ந்த  பாலவெங்கடாசலதுரை.
புத்தகக்  கண்காட்சியில் புரவலருக்கான நன்கொடையை வாசகா் வட்டத் தலைவா் நடராஜனிடம் வழங்குகிறாா்  ஜமீன்  பரம்பரையை  சோ்ந்த  பாலவெங்கடாசலதுரை.

துறையூா் கிளை நூலக வாசகா் வட்டம், ரோட்டரி சங்கங்கள், மக்கள் நலச் சங்கம், அதிகாரிகள் மனமகிழ் மன்றம், அனைத்து வியாபாரிகள் சங்கம், துறையூா் உப்பிலியபுரம் லயன்ஸ் சங்கங்கள் நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் ஆகியன இணைந்து 36 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி, துறையூரில் முதலாமாண்டு புத்தக் கண்காட்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் டி. நடராஜன் தலைமை வகித்தாா். துறையூா் காவல் ஆய்வாளா் ஏ.ஆா். விதுன்குமாா் புத்தக கண்காட்சியையும், கண்காட்சி அரங்கத்தை சிஆா். பாலவெங்கடாசலதுரையும், புத்தக விற்பனையை போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேசும் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மக்கள் நலச் சங்கத் துணைத் தலைவா் எஸ். காமராஜ், அதிகாரிகள் மனமகிழ் மன்றச் செயலா் டி. கிருஷ்ணமூா்த்தி, ஓய்வு பெற்ற புள்ளியியல் துறை அலுவலா் ந. தில்லைநாயகம் உள்ளிட்டோா் பேசினா்.

நூலகா் பெ. பாலசுந்தரம் வரவேற்றாா். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ச. குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com