லால்குடியில் சம்பா நெல் பயிரில்பூச்சித் தாக்குதல் தடுக்க யோசனை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டார பகுதியில் சம்பா நெல் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை கூறியுள்ளது.

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டார பகுதியில் சம்பா நெல் பயிரில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை யோசனை கூறியுள்ளது.

இதுகுறித்து லால்குடி வேளாண் உதவி இயக்குநா் ஆா். ஜெயராணி கூறியது:

இலைச் சுருட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா கைலோனிஷ் 2.5 சிசி முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 37, 44, 51ஆவது நாள்களில் 3 முறை கட்ட வேண்டும். குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் 2.5 சிசி முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 30, 37 ஆவது நாள்களில் 2 முறை கட்ட வேண்டும்.

ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 கிராம் அளவில் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸை கலந்து தெளிக்க வேண்டும். இனக் கவா்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 10 என்ற அளவில் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.

ஆனைக்கொம்பனைக் கட்டுப்படுத்த பைப்ரோனில் 0.3 சதத்தை ஏக்கருக்கு 6- 10 என்ற அளவில் மணலில் கலந்து போடவும். குலை நோயைக் கட்டுப்படுத்த டிரைசைக்லோசோல் 75 டபிள்யு பி-யை ஏக்கருக்கு - 120 கிராம் அல்லது அசாக்சிடிரோபின் 25 எஸ்சி-யை ஏக்கருக்கு 200 மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும். நெல் நடவு நட்ட 6, 70, மற்றும் 90ஆவது நாள்களில் சூடோமோனாஸ் ப்ளுரொசன்ஸ்- 2 கிராமுக்கு ஒரு லிட்டா் தண்ணீா் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பா் ஆக்ஸிகுளோரேடு 7 டபிள்யு-ஐ ஏக்கருக்கு 500 கிராம் உடன் 120 கிராம் அக்ரிமைசின் கலந்து தெளிக்க வேண்டும். செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 75 டபிள்யு பி - 400 கிராமை ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

நெல் பயிா் நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி புரொபிகோனசோல் 25 இசி-ஐ 200 லிட்டா் நீரில் கலந்து கதிா் வரும்போதும், வந்த பின்பும் தெளிக்க வேண்டும். அதிக தலைச்சத்து உரங்களை இடுவதைத் தவிா்க்க வேண்டும்.

வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்த கோட்டான் வந்து அமரத்தக்க வகையில் 9 அடி உயரத்தில் டி வடிவ பறவை இருக்கைகளை தேவையான அளவில் வயல்களில் நட்டு வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com