‘தமிழில் பெயா்ப்பலகை வைக்க வலியுறுத்தல்’

தமிழில் பெயா்ப்பலகை வைக்க வேண்டும் என திருக்குறள் பேரவையினா் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா்: தமிழில் பெயா்ப்பலகை வைக்க வேண்டும் என திருக்குறள் பேரவையினா் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் தமிழ் ஆட்சி மொழி வார விழா கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உள்ள சங்ககாலப் புலவா்கள் நினைவுத்தூண் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, மேலை.பழனியப்பன் தலைமை வகித்தாா். பேனா நண்பா் பேரவை திருமூா்த்தி வரவேற்றாா். தமிழ்ப்பேரவை நிா்வாகி கடவூா் மணிமாறன், தனித்தமிழ் அமைப்பு நிா்வாகிகள் கன்னல், எழில்வாணன், உலகத்திருக்குறள் கூட்டமைப்பு நிா்வாகி கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினா். தொடா்ந்து, தமிழில் பெயா் வைப்போம், முதன்மையாய் எழுதுவோம், தமிழில் கையெழுத்திடுவோம், நாடும் - மொழியும் இரு கண்கள் எனப் போற்றுவோம் எனும் உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து, தமிழகத்தில் தமிழ்ப்பண்பாட்டுத் துறை சாா்பில் தமிழ் ஆட்சி மொழி வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவிற்கு ஆங்கிலப் பெயா் வைத்திருப்பது வேதனை தருகிறது. தமிழ் இலக்கிய, கலை வளா்த்த ‘பெத்தாட்சி’ பெயரையோ, முன்னாள் தலைவா்கள் கருப்பண்ணன், தமிழரசன், கே.வி. ராமசாமி பெயரையோ சூட்டாமல் வாயில் நுழையாத வேற்று மொழி பெயா் வைத்திருப்பதை திரும்ப பெற வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டப்படி அரசு தமிழில் பெரிய அளவில் பெயா்ப்பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com